search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் எரிவாயு சிலிண்டர்"

    சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இம்மாதம் ரூ.35 அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றத்திற்கு ஏற்ப மானியத்தின் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். #Cookinggascylinder
    சென்னை:

    நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றம் செய்யப்பட்டு ரூ.806-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உள்ள விலையை ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகரித்து உள்ளது. இந்த விலை ஏற்றத்தை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என நடுத்தர மக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    சமையல் எரிவாயு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.747 ஆக இருந்த (மானியம் இல்லாத) சில்லறை விற்பனை விலை, கடந்த மே மாதத்தில் ரூ.96.50 குறைந்து ரூ.650.50 ஆக இருந்தது.

    மானியம் உள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர் தரும் விலை 2017-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.495.69 ஆக இருந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் ரூ.491.21 ஆக குறைந்திருக்கிறது.

    கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் விலை குறைந்த போது விலை குறைக்கப்பட்டது. தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால் ஜூலையில் ரூ.35-ம், இம்மாதம் (ஆகஸ்டு) ரூ.35-ம் என விலை உயர்த்தப்பட்டு உள்ளது.



    விலை ஏற்றத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போடப்படும் மானிய தொகையும் அதிகரித்து வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.  #Cookinggascylinder

    சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் 76 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. #LPGPriceHike
    புதுடெல்லி:

    சமையல் எரிவாயு சிலிண்டர் அத்தியாவசியங்களில் ஒன்றாகிவிட்டது. இதன்விலையை சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    மாதந்தோறும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று சமையல் எரிவாயுவின் விலை 1 ரூபாய் 76 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. #LPGPriceHike
    ×